தமிழ் புத்தாண்டு: பெ.நா.பாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2023 05:04
பெ.நா.பாளையம்: தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், அங்காளம்மன் கோவில், பஸ் ஸ்டாண்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில், அப்புலு பாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில், சின்ன தடாகம் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் அதிகாலை சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.