தமிழ்ப் புத்தாண்டு: திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய 4 ஏர் பூட்டுதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2023 05:04
திருப்பரங்குன்றம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமாக நடந்து வரும் திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடந்தது.
4 ஏர் பூட்டுதல்: கிராமத்தினர், விவசாயிகள் இன்று காலை குழந்தைகளுடன் புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து நான்கு ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்திலுள்ள கோயில் நிலங்களை உழுதனர். பின்பு கல்வெட்டு குகைக் கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி திருவிழா கொண்டாட்டங்கள், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கான கூலி நிர்ணயம் செய்து ஆலோசனை நடத்தினர். கிராமத்தினர் சார்பில் கோயிலில் பூஜை நடந்தது. விவசாயம் செழிக்கவும் மக்கள் நலம் பெற வேண்டியும் ஆண்டாண்டு காலமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என கிராமத்தினர் தெரிவித்தனர்.