பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
10:04
திருப்பரங்குன்றம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை முடிந்து அன்னதானம், விளக்கு பூஜை நடந்தது.
பஞ்சாங்கம் வாசித்தல்: கோயில் மண்டபத்தில் இரவு பக்தர்கள் முன்னிலையில், இந்த ஆண்டு மழை, கோயில் திருவிழாக்கள், உள்பட நாட்டு நடப்பு, ஆண்டின் சாதக, பாதக பலன்கள் குறித்து கோயில் சார்பில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனுக்ஞை பூஜை, மஹா கணபதி மூலமந்திர ஹோமம் முடிந்து மூலவர் விநாயகருக்கு 108 லிட்டர் பால், 108 இளநீர், 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகி 108 நைவேதனம் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.
பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில் மூலவருக்கு பூஜை முடிந்து வெள்ளி கவசம் சாத்துப்படியானது. கல்கத்தா காளியம்மன் கோயிலில் அனைத்து மூலவர் களுக்கும் அபிஷேகங்கள், பூஜை நடந்தது. கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மூலவருக்கு அபிஷேகங்கள் முடிந்து பழங்களால் அலங்காரம் நடந்தது.