திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பைரவர் சன்னதியில் ஜெயந்தன் பூஜை விழாவை முன்னிட்டு அஷ்ட பைரவர் யாகம் நடந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று காலை 9.30 மணிக்கு யாக சாலை பூஜைகள் பாஸ்கர் குருக்கள் தலைமையில் துவங்கியது. தொடர்ந்து அஷ்ட பைரவ யாகம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்து பைரவர் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். காலை முதல் திரளாக பக்தர்கள் யாகசாலை பூஜை, சுவாமி தரிசனம் செய்தனர். சன்னதியில் பெண்கள் மாவிளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்ற பிரார்த்திதனர். இரவில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பைரவர் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கோயிலிலிருந்து புறப்பாடாகி தீருவீதி வலம் வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பைரவர் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.