சந்தன முருகன் கோவில் திருவிழா: பறவைக் காவடி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2023 12:04
கூடலூர்: கூடலூர், மரப்பாலம் சீனக்கொல்லி ஸ்ரீ சந்தன முருகன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. 14ம் தேதி, இரவு 9:00 மணிக்கு, அம்மன் கரகம் எடுத்து வருவதற்காக கோவிலில் இருந்து புளியம்பாறை ஆற்றுக்கு ஊர்வலமாக சென்றனர். நேற்று முன்தினம், அதிகாலை காலை 5:00 மணிக்கு, ஆற்றில் இருந்து அம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். பிற்பகல் 1:30 மணிக்கு, புளியம்பாறை ஆற்றில் இருந்து பறவைக் காவடி ஊர்வலம் தூங்கியது. பக்தர்கள் வேல் பூட்டியும், பால்குடம் எடுத்து, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து, பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று, காலை மாவிளக்கு பூஜையும்; தொடர்ந்து அம்மன் வீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.