பதிவு செய்த நாள்
17
ஏப்
2023
02:04
அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நாளை துவங்குகிறது.
அன்னூர், மாரியம்மன் கோவிலில், 33 வது ஆண்டு பூச்சாட்டு திருவிழா நாளை துவங்குகிறது. நாளை காலை 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெறுகிறது. மாலை 6:30 மணிக்கு பூச்சாட்டு துவங்குகிறது. வருகிற 24ம் தேதி வரை தினமும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. வரும் 25ம் தேதி கணபதி ஹோமத்துடன், இரவு காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடக்கிறது. வரும் 30ம் தேதி வரை தினமும் இரவு பூவோடு எடுத்தல், அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடக்கிறது. வருகிற மே 1ம் தேதி இரவு அணிக்கூடை எடுத்து வருதலும், மே 2ம் தேதி அதிகாலையில் சக்தி கரகம் எடுத்தல், பொதுமக்கள் பூவோடு எடுத்தல், காலை 10:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு அம்மன் முக்கிய வீதிகளில் வழியாக திருவீதி உலா வந்து அருள் பாலிக்கிறார். மே 3ம் தேதி காலை பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. இரவு கம்பம் கலைக்கப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் இரவு கலை நிகழ்ச்சி மற்றும் இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.