சிங்கம்புணரி காளியம்மன் கோயில் பங்குனித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2023 05:04
சிங்கம்புணரி: சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெரு காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இத்திருவிழாவையொட்டி ஏப். 18 ஆம் தேதி இரவு சித்தர் முத்துவடுதநாதர் கோவிலில் இருந்து பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டு எடுத்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலில் அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. வரும் ஏப். 25ஆம் தேதி பால்குடம் எடுத்தல், சாமி பெட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், பாலாற்றில் இருந்து அம்மனுக்கு கரகம் எடுத்து வருதல், தீ சட்டி எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து ஏப். 26 ஆம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.