பதிவு செய்த நாள்
24
செப்
2012
10:09
விருதுநகர்: விருதுநகர் துள்ளு மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்களால், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயிலில், புரட்டாசி பொங்கல் விழா நடந்து வருகிறது. ஆறாம் நாள் விழாவையொட்டி, நேற்று முன்தினம் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அம்மன் அணிந்த வளையல்களை , இப்பகுதி பெரியோர்களால், ஐந்து கர்ப்பிணிகளுக்கு அணிவிக்க, "வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.இதன் பின் அம்மனுக்கு சந்தனகாப்பு, புஷ்ப அங்கி அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பூசாரி சங்கர், ""சுவாமிக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, அதன் வளையல்கள் கர்ப்பிணிகளுக்கு அணிவிக்கப்பட்டது."தினமலர் இதழில் வெளியான செய்தி தொடர்ந்து, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவில்பட்டி என, பல பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்தனர், என்றார்.