திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மேம்பாலம் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2012 10:09
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலத்தை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் திறந்து வைத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெற்கு கிரிபிரகாரத்தில் கோயிலுக்குள் இருந்து பக்தர்கள் வெளியே வரும் வழியில் உள்ள மேல் தளம் மிகவும் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பழுதடைந்து காணப்பட்ட மேல்தளம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த இடத்தில் மேற்கூரை மற்றும் பக்தர்கள் கடந்து செல்லும் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ. 4. 90 லட்சம் செலவில் தெற்கு பிரகாரத்தில் மேற்கூரை மற்றும் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இது பக்தர்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் கட்டண தரிசன பாதையை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டனும், பொது தரிசன பாதையை இணை ஆணையர் சுதர்சனும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கோயில் அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா, உள்துறை கண்காணிப்பாளர்கள் ராமசாமி, சுப்பிரமணியன், தலைமை மணியம் ராமசாமி, மேலாளர் மாரிமுத்து, கணக்கர் விஜயன், ஸ்தலத்தார் சபை தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.