பெண்ணாடம்: பெண்ணாடம் பரிமள அரங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள அஞ்சலி ஆஞ்சநேயருக்கு 23ம் தேதி சிறப்பு பூஜை நடந்தது.இதையொட்டி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரித்த ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை அஞ்சலி ஆஞ்சநேயர் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.