பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் பாலாலய கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2023 10:04
பல்லடம்: பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில், பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது.
பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பொங்காளி அம்மன் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. கோவிலை புணரமைத்து திருப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அறநிலையத்துறை இதற்கு அனுமதி அளித்த நிலையில், திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. கோவிலின் மூலஸ்தானத்திலும் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய இருப்பதால், அதுவரை பாலாலய கும்பாபிஷேகம் நடத்தி வழிபடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, நேற்று காலை 4.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பாலாலய கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, 6.30 முதல் 7.30 மணிக்குள் பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்கள் பங்கேற்று பொங்காளியம்மனை வழிபட்டனர்.