கூடலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2023 06:04
கூடலூர்: கூடலூர் பாண்டியார் டான்டீ ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், 36 ஆண்டு திருவிழா 21ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 10:00 மணிக்கு கோட்ட மேலாளர் ஸ்ரீதர் கொடியேற்றினார். இரவு, இரும்புபாலம் ஆற்றங்கரையில் இருந்து, அம்மன் கரகம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம், காலை சிறப்பு பூஜைகளையும்; 12:00 மணிக்கு இரும்புபாலம் ஆற்றில் இருந்து, பறவைக் காவடி ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேற்றி கடனை நிறைவேற்றினர். இரவு, 9:00 மணிக்கு தேர் ஊர்வலம் துவங்கி பால்மேடு, மரப்பாலம், ஆமைக்குளம் வரை சென்று கோவிலை வந்து விடுகிறது. நேற்று, காலை மாவிளக்கு பூஜையும்; பிற்பகல் கரக ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.