அன்னூர்: அன்னூர் பெருமாள் கோவிலில், நாளை ராமானுஜர் ஜெயந்தி உற்சவ விழா நடக்கிறது. அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (25ம் தேதி) ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி உற்சவ விழா நடக்கிறது. காலை 6:30 மணிக்கு, விஸ்வக் சேனா ஆராதனை, ஹோமம், திருமஞ்சனம் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு சுவாமிக்கு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. சுவாமி உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார். பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெறலாம், என கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.