ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ராதானூர் அருகே, மேடாகோட்டை அழகர் அய்யா திருக்கோயில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அணுக்கை, கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்களால் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.