தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் பாரதி நகரில், முத்து மாரியம்மன் கோவில் கட்டுமான பணிக்கான, பூமி பூஜை நடைபெற்றது. முன்னதாக, கோயில் அமைய உள்ள பகுதியில், கிராம முக்கியஸ்தர்கள் மூலம் பூமி பூஜைகள் நடைபெற்று, அடிக்கல் நாட்டப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆர்.எஸ். மங்கலம் கீழக்கோட்டையில், மஞ்சண மாரியம்மன் கோயில், கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜைக்கான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்கோட்டை கிராமத்தினால் செய்திருந்தனர்.