செந்துறை, நத்தம் அருகே சேத்தூரில் செல்வமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் கடந்த 16-ம் தேதி கரந்தமலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்புக் கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. திருத்தேர்ச்சட்டம் ஏற்றுதலும், தோரணம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பக்தர்கள் மாவிளக்கு, அக்னிசட்டி, பூக்குழி, முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினார். தொடர்ந்து பொங்கல் வைத்தல் மற்றும் கிடாய் வெட்டுதல் நடந்தது. இன்று பாரிவேட்டை மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேத்தூர் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.