பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராமானுஜர் அவதார தின உற்சவம் வந்தது.
கி.பி. 1017 இல் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் பிறந்தார். ராமானுஜர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆழ்வார்கள் சன்னதியில், மூலவர் மற்றும் உற்சவர் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து இன்று அவரது 1006 வது அவதார தினத்தை முன்னிட்டு, காலை 9:30 மணி முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்து, சுந்தரராஜ பெருமாள் சன்னதியில் ராமானுஜர் எழுந்தருளி சாற்றுமுறை, கோஷ்டி நடந்தது. ஏற்பாடுகளை திருநாமா சங்கு சக்கர குழுவினர் மற்றும் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.