சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைக்கு முகூர்த்தக்கால்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2023 06:04
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட இக்கோயிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி யாகசாலை அமைப்பதற்காக நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி தலைமை வகித்தார். கோயில் சூப்பிரண்டு தன்னாயிரம் முன்னிலை வகித்தார். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முகூர்த்தக்காலல் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார், சத்தியசீலன் மற்றும் திருப்பணிக்குழுவினர், கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.