பதிவு செய்த நாள்
25
ஏப்
2023
06:04
கோத்தகிரி: கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி பஜார் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. நாள்தோறும், பல்வேறு சமூக மக்களின் உபயமாக, அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, போயர் சமூக மக்கள் சார்பில், நேற்று விழா நடந்தது. அதிகாலை முதல், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அன்னப்பச்சி ஊர்வலத்தில், அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.