பெரிய மாரியம்மன் கோவிலில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2012 10:09
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பெரிய மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் குவிகின்றனர். கோவில் மேம்பாட்டு பணி ஜூலை மாதம் துவங்கியது. அம்மனை தரிசிக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த பலகை மேடை, மின் ஒயர்கள் சீரமைப்பு, கோவில், அலுவலக தரை சீரமைப்பு உள்ளிட்ட பணி துரிதமாக நடந்தது.மேம்பாட்டு பணி காரணமாக, கோவிலின் எதிரே உள்ள லாட்ஜில், பெரிய மாரியம்மன் கோவில் அலுவலகம் இயங்கி வருகிறது. ஓரிரு வாரத்தில் பணிகள் முடிவடையும். கோவில் செயல்அலுவலர் சுப்பிரமணியம் கூறுகையில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், கோவில், அலுவலக தரைகளுக்கு, டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. அம்மனை தரிசிக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த மரப்பலகை மேடை அகற்றப்பட்டு, சில்வர் ஸ்டீலில் மேடை அமைக்கப்பட உள்ளது. மின் ஒயர்கள் சீரமைக்கப்படுகிறது. ஓரிரு வாரத்தில் பணிகள் முடிவடையும், என்றார்.