நெல்லியாளம் மாரியம்மன் சித்திரை திருவிழா : அம்மனுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2023 03:04
பந்தலூர் : பந்தலூர் அருகே நெல்லியாளம் டான்டீ மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேர் ஊர்வலம் மற்றும் விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகளிர் இணைந்து அம்மனுக்கு திருக்கல்யாண பூஜை நடத்தினார்கள்.
முன்னதாக பெண்கள் இணைந்து அம்மன் திருக்கல்யாணத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு பூஜைகள் செய்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்கு சரகங்களை சேர்ந்த பக்தர்கள் இணைந்து பறவை காவடி ஊர்வலம் நடத்தினார்கள். இதில் பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் அண்ணாமலை, செயலாளர் ஜெகன், பொருளாளர் அறிவழகன், தர்மகர்த்தா கிருஷ்ணமூர்த்தி, ஆலோசகர் பெரியசாமி மற்றும் கோவில் கமிட்டியினர் தோட்ட தொழிலாளர்கள் செய்திருந்தனர்.