மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2023 09:04
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் தீர்த்தவாரி, பூப்பல்லக்குடன் சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது. இக்கோயிலில் 10 நாட்கள் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தெற்குப்பட்டு மூலஸ்தான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்து ஏப்.18ல் காப்புக் கட்டி சித்திரைத் திருவிழா துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை அம்பாள் பவனியும், இரவில் வாகனங்களில் அம்பாள் திருவீதி உலாவும் நடந்தது. ஏப்.25ல் தேரோட்டமும், மறுநாள் பால்குட விழாவும் நடந்தது. நேற்று பத்தாம் திருநாளை முன்னிட்டு காலை 10:00 மணி அல் அம்மன் கற்பக விருட்சத்தில் எழுந்தருளி தீர்த்தவாரியும் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. கோயிலிலிருந்து புறப்பாடாகி திருக்குளம் வலம் வந்தார். இரவில் பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி தீபராதனை நடந்ததது. விநாயகரும், அம்பாளும் திருவீதி பவனி வந்தனர். காலை 11:30 மணி அளவில் ஆதினமிளகி முத்து முனியைய்யா சுவாமி கோவில் வழிபாடு முடிந்து மஞ்சுவிரட்டு நடந்தது தொடர்ந்து சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது.