கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2023 02:04
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக லிங்கேஸ்வரர் கோவிலின் உப கோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று வாஸ்து ஹோமம், திக்பாலகர் பூஜைகள் நடைபெற்றது. இன்று புண்யாகவாஷனம், கருட கலச ஆவாகனம், மூலமந்திர ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைப்பெற்றது. அதன்பிறகு கருட கொடி ஏற்றப்பட்டது. தேர்விழாவை முன்னிட்டு, நடைப்பெற்ற கஜ ஆரோகணம்,வரும் 5ம் தேதி அன்று கஜ அவரோகணம் நடைபெறும்.