பதிவு செய்த நாள்
01
மே
2023
09:05
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில், 73ம் ஆண்டு பொங்கல் வசந்த உற்சவ விழா துவங்கியுள்ளது.
இரண்டாம் நாளான நேற்று, மகா சண்டி ேஹாம பூஜைகள் நடந்தது. திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையிலான குழுவினர், வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி முன்னிலையில், ேஹாம பூஜைகளை நடத்தினர். காமாட்சியம்மனுக்கு, மகா சண்டிகாதேவி அலங்கார பூஜைகள் நடந்தது. இன்று, ஸ்ரீசுயம்வர பார்தி யாகமும், நாளை, ஸ்ரீசுப்பிரமணியர் அர்ச்சனையும், 3 ம் தேதி பொங்கல் விழாவும், அலகுகுத்தி தேர் இழுக்கும் வைபவமும் நடக்கிறது. வரும் 4ம் தேதி தர்ம கல்யாணம், 5ம் தேதி சந்திர சூடாமணி ஸ்ரீசக்கரத்தில் காமாட்சியம்மன் திருவீதியுலா, 6ம் தேதி மஞ்சள் நீர் விழா, 7ம் தேதிஅன்னதானம் நடக்கிறது.