திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 09:05
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்குசிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ அபிஷேகம், ஹோமம், அலங்காரம், மகாதீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். மூலவர் சிறப்பு அலங்காரத்தில், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்சவாகனத்தில், வான வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. இல் பக்தர்கள் மற்றும் ஆரிய வைசிய சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.