கோவை : கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் திருக்கோயில் 2023 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. முதல் நாள் மகா கணபதி ஹோமம் ,முகூர்த்த கால் நடுதல் ,சிறப்பு அபிஷேகம் ,கிராம சாந்தி ஆகியவை நடைபெற்றது அதைத்தொடர்ந்து கொடியேற்றம் பூச்சாட்டு ஆகியன நடந்தன. பின்னர் 20 - 04- 23 வியாழக்கிழமை அன்று அக்னி சாட்டு நடைபெற்றது அதை தொடர்ந்து முதல் திருவிளக்கு வழிபாடு நடந்தது அதில் அம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார் அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக திருவிளக்கு வழிபாடு நடந்தது இதில் அன்ன வாகனத்தில் அம்மன் உலா வந்தார். அதைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது அதன் பின் அக்னிசட்டி ஏந்தி கோவை நகர வீதிகளில் பெண்கள் ,ஆண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக ஊர்வலம் வந்தனர் .அதை தொடர்ந்து அம்மனுக்கு தமிழ் முறை இலட்சார்ச்சனை நடந்தது .நிகழ்வின் கடைசி நாளாக ம30 - 04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்கோவிலில் சங்காபிஷ 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து வசந்த விழா நடைபெற்று சித்திரை திருவிழா நிறைவுற்றது.