கோவை : வடவள்ளி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில் சத்யசாய் பாபாவுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது இதில் 108 அஷ்டோத்திரங்களை மையமாக வைத்து பஜனை பாடல்கள் பாடப்பட்டது இந்த நிகழ்வானது கோவை வடவள்ளியில் உள்ள சமுதியில் நடந்தது கோவை மாவட்டத்தில் உள்ள மெட்ரோ குரூப்,குனியமுத்தூர் ,கோவைப்புதூர், மாச்சம்பாளையம் , ராமநாதபுரம், சாய்பாபா காலனி ,ஆர் எஸ் புரம் ஆகிய பகுதிகளில் இருந்து சுவாமிக்கு பஜனை பாடல்கள் பாடப்பட்டன இதில் திரளாக சாய் அன்பர்கள் கலந்து கொண்டு பகவானின் அருளை பெற்றனர்.