வடமதுரையில் இருந்து சமயபுரத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 05:05
வடமதுரை: வடமதுரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
வடமதுரையில் கரகாத்தாள் புற்று மாரியம்மன் சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் ஆண்டுதோறும் இப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 39 வது ஆண்டு பயணத்திற்காக கொடுமுடி காவிரி தீர்த்தம், பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்து வடமதுரை மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று அலங்கரிக்கப்பட்ட தேருடன் ஏராளமான பக்தர்கள் ஒரே குழுவாக சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் நாளை (மே 3) சமயபுரத்தில் அம்மன் தரிசனம் செய்து ஊர் திரும்புவர்.