பதிவு செய்த நாள்
26
செப்
2012
10:09
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இக்கோவிலில் கடந்த, 19ம் தேதி திருத்தேர் திருவிழா துவங்கி, தினமும் காலை யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடந்து வருகிறது. மாலையில், அன்னம், சிம்மம், அனுமந்த வாகனம், கருட வாகனம், யானை வாகனம் என பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி சேவை சாதித்தார்.நேற்று மாலை, 5.30 மணிக்கு நடந்த திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து, பூதேவி, ஸ்ரீதேவியுடன் அரங்கநாதர் திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்தார். பின் புஷ்ப பல்லக்கில் திருவீதியுலா நடந்தது.இன்று காலை, 6 மணிக்கு ஸ்வாமி திருத்தேர் எழுந்தருளலும், 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், காலை, 11 மணிக்கு செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானமும் நடக்கிறது.தொடர்ந்து, 29ம் தேதி வரை விழா நடக்கிறது.ஏற்பாடுகளை உதவி ஆணையர் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.