மேலுார் நொண்டிச்சாமி கோயில் திருவிழா : பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 04:05
மேலார்: மேலுார், நொண்டிக்கோவில்பட்டியில் 18 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட நொண்டிச்சாமி கோயில் கும்பாபிஷேகம் மே 4ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காஞ்சிவனம் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நொண்டிச்சாமி கோயிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.