சுண்டவயல் பகவதி அம்மன் கோயிலில் 3000 தேங்காய்கள் உடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2023 04:05
கூடலூர்: கூடலூர், பாடந்துறை சுண்டவயல் பகவதி அம்மன் மற்றும் உளிய மாஞ்சோலை பரதேவன் கோவிகளில், பாரம்பரியமான தேங்காய் உடைப்பு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலை சிறப்பு பூஜைகளும், பாரம்பரிய நடன நிகழ்சிகள் நடந்தது.
இன்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மவுண்டாடன் செட்டி, பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சி நடந்தது. காலை11:30 மணிக்கு அருள் வாக்கு கூறும் நிகழ்ச்சியும், பாரம்பரியமான தேங்காய் உடைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, உளிய மாஞ்சோலை பரதேவன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று தேங்காய் உடைத்தனர். விழாவில் பக்தர்கள் சார்பில் 3000 தேங்காய்கள் உடைக்கப்பட்டது. பின், அவைகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.