செந்துறை, நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி களத்துப்பட்டி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் நேற்று முன்தினம் அம்மன் பூஞ்சோலையில் இருந்து அலங்காரம் செய்யப்பட்டுஅம்மன் ஊர்வலம், முளைப்பாரி, வானவேடிக்கைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பொங்கல் வைத்தல், பூ இறங்குதல், கிடாய் வெட்டுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். நாளை காலை பாரி விளையாட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை களத்துப்பட்டி, கன்னிமார்புரம், கல்லாத்துபாலம் ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.