பதிவு செய்த நாள்
06
மே
2023
11:05
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழாவை, கலசவிளக்கு வேள்வி பூஜையுடன், பங்காரு அடிகளார், நேற்று துவக்கி வைத்தார்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறும். இந்த ஆண்டு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், 4ம் தேதி, கலச விளக்கு வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நவதானிய யாக குண்டத்தில், கலசவிளக்கு பூஜையை, பங்காரு அடிகளார், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார், செவ்வாடை பக்தர்களுக்கு, பிரசாதம், அன்னதானம் வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், சித்தர் பீட தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.