சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2023 01:05
தஞ்சாவூர்,சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு, சித்திரை திருவிழா கடந்த ஏப்.27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, ஒன்பதாம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில், வள்ளி– தெய்வானையுடன் சுவாமிநாத சுவாமி எழுந்தருளிய நிலையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.