காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் ஆன்மிகபூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சுவரும் வகையில் பல்வேறு மூலிகை செடிகள் மற்றும் நவகிராக ஆன்மிகமண்டபம் அனைவரும் கவரும் வகையில் உள்ளது.
காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு தார்பாரண்யோஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனிஸ்வரபகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள் பலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினம் வருகின்றனர்.இக்கோவில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெறும்.மேலும் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5 தேர்திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலன்கருதி மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் ரூ.7.77 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் ஆன்மீக பூங்கா அமைக்கப்பட்டது. இதில் தியானமண்டபம், 9 நவகிரக ஆன்மிக மண்டபம். பூந்தோட்டம்,பலவகையான மூலிகை செடிகள்.பூங்காவில் நடுவில் அழகிய குளம் குளத்தை சூற்றில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் வண்ணன் கற்கள் மூலம் அனைவரும் கவரும் வகையில் அமைக்கப்பட்டது. மேலும் பூங்காவை சூற்றி வண்ண விளக்குகளுடன் சுற்றுலாப்பயணிகள் கவரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் கொண்டது ஆன்மீக பூங்கா பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல்.21ம் தேதி ஆன்மீகப் பூங்காவை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆன்மிக பூங்கா தினம் காலை 6மணி முதல் இரவு 9மணி வரை திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலை,மாலை வேலைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை இன்பசுற்றுலாப் போல் ஆன்மிகபூங்காவை கண்டுக்களிக்க மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.