15 ஆண்டுக்குப் பின் நடந்த சின்னசெடிப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2023 01:05
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே சின்ன செடிப்பட்டியல் 15 ஆண்டுக்குப் பின் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சின்ன செடிப்பட்டியில் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருவிழா நடந்த நிலையில் மீண்டும் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி கடந்த மே 5 கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் மற்றும் காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அன்று இரவு 2 மணிக்கு அம்மனுக்கு அலங்காரம் செய்து வானவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க சன்னதிக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து இன்று முளைப்பாரி, மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், அழகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஊராட்சி தலைவர் கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை அம்மன் மஞ்சள் நீராடி பூஞ்சோலை செல்லுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.