கமுதி: கமுதி அருகே புல்வாய்க்குளம் கிராமத்தில் பழமையான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.இங்கு சித்திரை பெளர்ணமி முன்னிட்டு சித்திரை திருவிழா நடந்தது.இதனை முன்னிட்டு கடந்த ஒருமாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.முக்கிய நிகழ்ச்சியாக தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல்,கேழ்வரகு சேகரித்து புட்டு தயாரித்து பெருமாளுக்கு படைத்து வழிபட்டனர்.பின்பு விநாயகர் கோயிலில் இருந்து காப்புகட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.பெருமாளுக்கு பால் அபிஷேகம், சிறப்புபூஜை, தீபாராதனை நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை புல்வாய்குளம் மாணவ நல மன்றம் குழுக்கள் செய்தனர். இதேபோன்று கமுதி செங்கப்படை கிராமத்தில் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.