வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெரியார் நகர் ஆதிதிராவிடர் உறவின்முறை மாரியம்மன் கோயில் உற்ஸவ சித்திரை பெருவிழா 5 நாட்கள் நடந்தது. மே.,1ல் திருவிளக்கு பூஜை, மே.,2ல் மூங்கில் களை நடுதல் மற்றும் நையாண்டி மேளம் வான வேடிக்கை மயிலாட்டத்துடன் செமினிப்பட்டி கிராமத்திலிருந்து கரகம் ஜோடித்து அம்மனை கோயில் அழைத்து வந்தனர். பின் சக்தி கிடா வெட்டி, மாவிளக்கு எடுத்து, சேத்தாண்டி வேஷமிட்டு பக்தர்கள் வழிபட்டனர். ஒட்டுப்பட்டி 18 ஆசாரி மண்டகப்படியில் பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்தார். பொங்கல் வைத்து, பால்குடம், அக்னிச்சட்டி, பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை பெரியார் நகர் மக்கள் செய்திருந்தனர்.