சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா: மே 9ல் மோகினி அவதாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2023 11:05
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சித்திரை திருவிழாவில், மே 9ல் மோகினி அவதாரம் எடுத்கல் நடக்கிறது.
சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. ஏப். 19ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 2ல் நடந்தது. மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல் மே 5ல் நடந்தது. ராம அழகர் கோயில் சித்திரை திருவிழாவில், திருக்கல்யாணம் வெள்ளியங்கிரி சஞ்சீவி நிலையில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இவற்றைத் தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மண்டகப்படிகளில் எழுந்தருளல் நடக்கிறது. மே 9ல் மோகினி அவதாரம் எடுத்தல், மே 10ல் பூ பல்லக்கு ஊர்வலம் மற்றும் புட்டு திருவிழா ஆகிய நிகழ்வுகள் நடக்க உள்ளது.