Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் பூஜை இடம் ... பிரசன்ன மகாகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பிரசன்ன மகாகணபதி கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகள்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலையில் பக்தர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகள்

பதிவு செய்த நாள்

08 மே
2023
06:05

தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், தென் கயிலாய பக்தி பேரவையுடன், இந்திய கடற்படை அதிகாரிகள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், கடந்த பிப்ரவரி 17ம் தேதி முதல் பக்தர்கள் மலையேறி ஈசனை தரிசிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தொடர்ந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். இந்நிலையில், தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலையில், பக்தர்கள் மலையேறும் சமயங்களில் தூய்மை பணி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், சிவாங்கா பக்தர்களுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் இணைந்து, நேற்று வெள்ளியங்கிரி மலையில், தூய்மை பணி நடந்தது. இதில், மலை ஏறும் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்ற குப்பையை சேகரித்து, அடிவாரத்திற்கு கொண்டு வந்து அகற்றினர். இதில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிவாங்கா பக்தர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இந்திய கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வரும் மே, 14, 21, 28 மற்றும் ஜூன் 4 என அடுத்தடுத்து வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், வெள்ளியங்கிரி மலையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள், 8300015111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar