பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தெற்குபாளையம் காந்திநகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 40ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது.
விழாவை ஒட்டி கடந்த, 24ம் தேதி முனி முடுக்குதல், பூச்சாற்றுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், அணி கூடை கொண்டு வருதல், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை விவேகானந்தா நகரில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு திருக்கல்யாண விழா நடத்தி, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னமார் கோவிலிலிருந்து பக்தர்கள், பால் கரகம், அக்னி கரகம் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். விழாவை ஒட்டி பக்தர்களுக்கு காலை, மதியம் இருவேளை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.