பதிவு செய்த நாள்
10
மே
2023
04:05
போத்தனூர்: போத்தனூர் அடுத்து மேட்டூரிலுள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 25ல் கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் வரை கம்பம் சுற்றுதல் நடந்தது. நேற்று இரவு அம்மன் திருக்கல்யாணம், மூரண்டம்மன் கோவிலுக்கு சென்று கரகம் முத்தரிக்க அழைத்து வருதல் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை சாமி கரகத்துடன் ஊர்வலம் மூரண்டம்மன் கோவிலில் துவங்கி, ஊர் சுற்றி, கோவிலை வந்தடைகிறது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை, அடி விழுந்து கும்பிடுதலும் மாலை மாவிளக்கு வழிபாடும் நடக்கின்றன. நாளை சப்பரத்தில் அம்மன் ஊர் மக்களுக்கு அருள்பாலித்தல், மஞ்சள் நீராடலும், 12 காலை அபிஷேக அலங்கார பூஜை, மதிய விருந்து மற்றும் மாலை விளக்கு பூஜையும் நடக்கின்றன, ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் விஸ்வனாதன், சின்ன கவுண்டர் பார்த்திபன், இளந்தாரி கவுண்டர் மருதாசலம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.