பதிவு செய்த நாள்
11
மே
2023
03:05
தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், வெள்ளியங்கிரி ஆண்டவர் வழிபாட்டு குழு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மழை வேண்டி வேள்வி நடந்தது.
வெள்ளியங்கிரி ஆண்டவர் வழிபாட்டு குழு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், வெள்ளியங்கிரி மலையிலும், அடிவாரத்தில் கோவிலிலும், மழை வேண்டி வேள்வி நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, சிவனடியார்கள், வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலையில், மழை வேண்டி வேள்வி வழிபாடு நடத்தினர். அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், விநாயகர் வழிபாடு, 108 தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து மழை வேண்டி பதிகம் பாடி பெருவேள்வி நடந்தது. பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர், வேள்வி நடத்தினர். இதில், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.