அரியாங்குப்பம், : முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி நேற்று கரக திருவிழா நடந்தது.
முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்று கரக திருவிழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. இன்ற மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 12ம் தேதி தீ மிதி திருவிழாவும், 13ம் தேதி தெப்பல் உற்சவமும், 19ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.