அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 164 வது குருபூஜை விழா; முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2023 03:05
புதுச்சேரி ; அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 164 வது பிறந்தநாள் குருபூஜை விழாவில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை செய்தார்.
புதுச்சேரி கோரிமேடு சத்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 164 வது பிறந்தநாள் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. குருபூஜையில் சுவாமிக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் தேனி ஜெயக்குமார் சந்திர பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.