திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2023 03:05
காரைக்கால்: காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழா மகாகணபதி ஹோமத்துடன் விழா துவக்கியது.
புதுச்சேரி மாநில காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.கோவிலின் பிரமோற்சவ விழா முன்னிட்டு இன்று ஸ்ரீமகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது. பின்னர் செர்ணகணபதி சன்னதியில் கஜப்பூஜை நடைபெற்றது. தினம் விநாயகர், சுப்ரமணியர். அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் வீதியுலா, செண்பகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வரும் 28ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில் தங்க ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா, 30ம் தேதி தேரோட்டம். 31ம் தேதி சனீஸ்வரபகவான் தங்ககாக வாகனத்தில் வீதியுலா.1ம் தேதி தெப்போற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.