பதிவு செய்த நாள்
12
மே
2023
03:05
அவிநாசி;அவிநாசி அருகே கந்தம்பாளையத்தில், தம்புராட்டி அம்மன், ஸ்ரீ கருப்பராயர், பேச்சியம்மன் கோவில் உள்ளது.
பழமைவாய்ந்த இக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா, 14ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று 500 பெண்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து, ஐந்து கி.மீ., ஊர்வலமாக சென்றனர். கும்பாபிேஷக விழாவில் இன்று புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கோ பூஜை, கணபதி, மகாலட்சுமி, நவக்கிரஹ ஹோமங்கள் மற்றும் வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்டவைகளுடன் முதல் கால யாக வேள்வி பூஜை துவங்க உள்ளது. நாளை இரண்டாம் கால வேள்வி யாக பூஜையில் விசேஷ சாந்தி, தான்யாதிவாசம், தீபாராதனை ஆகிய பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் 14ம் தேதி காலை, 8:30 முதல், 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தம்புராட்டி அம்மன் முதல் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.