திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2023 04:05
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் வசந்தப் பெருவிழா துவங்கியது.
இக்கோயிலில் வசந்தப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பூச்சொரிதல் விழா நிறைவை அடுத்து, நேற்று மாலை திருத்தளிநாதர் கோயிலிருந்து உற்ஸவர், கொடிப்படம், அபிேஷக பொருட்களுடன் புறப்பட்டு பூமாயிஅம்மன் கோயில் வந்தனர். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்கின. வாஸ்துசாந்தி, ேஹாமம் உள்ளிட்ட யாக பூஜைகளை ரமேஷ் குருக்கள், பாஸ்கர் குருக்கள் செய்தனர். பின்னர் யாகசாலையிலிருந்த கலசநீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. இரவு 8:15 மணி அளவில் கொடியேற்றப்பட்டு, அலங்கார தீபராதனை நடந்தது. பின்னர் காப்புக்கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து அம்மன் கோயில் திருக்குளத்தை வலம் வந்தார். தினசரி இரவில் அம்மன் குளத்தை வலம் வருதல் நடைபெறும். மே 20ல் காலையில் தீர்த்தவாரி.மஞ்சள்நீராட்டும், இரவில் கோயில் குளத்தில் அம்மன் தெப்பம் வலம் வருதலுடன் விழா நிறைவடையும். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழா குழுவினர் செய்கின்றனர்.