தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் பாலாலய நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2023 02:05
அவிநாசி: சேவூர் அருகே உள்ள தாளக்கரை லஷ்மி நரசிம்ம பெருமாள் கோவிலில் மே 25ல் பாலாலய நிகழ்ச்சி.
சேவூர் அருகே பிரசித்தி பெற்ற தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோவிலில் திருப்பணி தொடங்குவதையொட்டி,மே 25ம் தேதி பாலாலய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பல நூற்றாண்டு பழமை வாய்த்ததும், மாவட்டத்திலேயே தனி சன்னதியாக நரசிம்மருக்கு இடதுபுறம் மஹாலக்ஷ்மி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் போற்றுதலுக்குறிய தலமாகவும் தாளக்கரை லஷ்மி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பணி தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக,மே 25ம் தேதி பாலாலய சிறப்பு பூஜை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில்,கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.