சித்திரை கடைசி ஞாயிறு; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2023 04:05
கோவை ; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை அருகே உள்ள மாசாணியம்மன் கோவிலில் சித்திரை கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விளக்கேற்றி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். புஷ்ப அலங்காரத்தில் மாசாணி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.